கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ஹிட் ஆனது. மேலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகமான KGF 2 மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது.

மேலும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் நடிக்கிறார்.இதனால் ரசிகர்களுக்கிடையே ஆர்வம் அதிகரித்து வரும் இந்த நிலையில் படக்குழுவினர் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.