ஜெர்மன் அரசு அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பும் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே நான்காவது கொரோனா அலையை எதிர்கொள்ளும் வகையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 67 சதவீதம் மக்கள் மட்டுமே ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் கடுமையான நோய் மற்றும் கொரோனா தொற்றால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சாக்சோனி மாநில முதல்வர் மைக்கேல் க்ரெட்ச்மெர், வரவிருக்கும் 4-வது கொரோனா அலையானது முந்தைய அலைகளை விட பயங்கரமாக இருக்கும் என்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். எனவே 3G மற்றும் Work From Home விதிமுறைகள் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.