Categories
சினிமா தமிழ் சினிமா

‘கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்’… பிக்பாஸ் அர்ச்சனா மகள் உருக்கமான வேண்டுகோள்…!!!

பிக்பாஸ் கொண்டாட்டத்தின் போது அர்ச்சனாவின் மகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இதில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டு 75 நாட்களுக்கும் அதிகமாக பிக்பாஸ் வீட்டில் தங்கி இருந்தவர் அர்ச்சனா. இவர் இந்த நிகழ்ச்சியில்  ரியோ ,கேபி ,சோம் ,நிஷா ஆகியோருடன் இணைந்து அன்பு கூட்டணி அமைத்து விளையாடுவதாக விமர்சனங்கள் எழுந்தது  . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சமூக வலைத்தளங்களில் தன்னை வெறுப்பவர்களின் தரம் தாழ்ந்த விமர்சனங்களை கண்ட அர்ச்சனா தனது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து சிறிது நாட்கள் விலகி இருக்கப்போவதாக அறிவித்தார் .

Image result for bigg boss archana and his daughter

இந்நிலையில் இந்த சீசன் போட்டியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது . அதில் அர்ச்சனா தனது மகள் சாராவுடன் கலந்து கொண்டு ‘காலையில் தினமும் கண் விழித்தால்’ பாடலுக்கு நடனமாடினார் . இதன் பின் பேசிய அர்ச்சனாவின் மகள் சாரா ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர்கள் பலரை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்திருந்தார்கள் . தயவு செய்து யாரும் இப்படி செய்யாதீர்கள் ‌. மேலும் அம்மா நிகழ்ச்சியில் இருந்தபோது அவருக்கு ஆதரவளித்த அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார் .

Categories

Tech |