Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் கேன் சரிந்து….. மேலெழும்பிய தீ….. ஹோட்டல்காரர் மனைவி மரணம்….!!

கள்ளக்குறிச்சி அருகே சமையல் செய்யும்போது திடீரென மேல்நோக்கி எழும்பிய தீ  சேலையில் பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மணிமேகலை. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் அதே பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம் ஹோட்டலுக்கு  ராஜேந்திரன் செல்ல குழந்தைகள் இருவரும் வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன்பு விறகடுப்பில் ராஜேந்திரனின் மனைவி மணிமேகலை சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மண்ணெண்ணெய் கேன் சரிந்து தீயில் கொட்டியதில் குபீரென்று மேல்நோக்கி எழும்பி  மணிமேகலை சேலையில் பற்றியது.

இதில் தீக்காயத்தால் அலறித் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். ஆனால் அங்கு அவர் செல்லும் முன்பே பரிதாபமாக உயிரிழந்தார். பின் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மணிமேகலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |