கேரளாவில் வரும் 17-ஆம் தேதி முதல் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக கேரளாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட அனைத்துக் கோயில்களிலும் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இரு வாரங்களுக்கு முன் சபரிமலை கோயில் தவிர மற்ற கோயில்களில் வெளியே நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மலையாள மாதம் ஒன்றாம் தேதியான வரும் 17-ஆம் தேதி முதல் சபரிமலையை தவிர மற்ற கோவில்களுக்குள் சென்று தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு கோயில்களில் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.