Categories
தேசிய செய்திகள்

கேரளா தங்கம் கடத்தல் வழக்கு …. ஸ்வப்னா ஆடிட்டர் வாக்குமூலம் …!!

ஒரு கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சொப்னாவின் வங்கி லாக்கர் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது என சொப்னாவின் ஆடிட்டர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரளாவில் முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்திற்கு மேற்காசிய நாடனான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் இருந்து கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் சொப்னாசுரேஷ், சரித்குமார், சந்திப்நாயர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம்  NIA எனப்படும் தேசிய புலன் ஆய்வுத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் பினராய்டு விஜயனின் முதன்மை செயலாளராக பதவிவகித்து வந்த சிவசங்கருக்கு குற்றவாளி சொப்னாயுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றசாட்டு எழுந்தது. அவர் சிவசங்கருடன் பலமுறை தொலைபேசியில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரிட மும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சொப்னா மற்றும் அவரது ஆடிட்டரின் பெயரில் உள்ள வங்கி லாக்கரில் இருந்து ஒரு கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து சொப்னாவின் ஆடிட்டரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிவசங்கர் உத்தரவின் பேரில் அந்த வாங்கி locker  வழங்கப்பட்டதாக ஆடிட்டர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் ஆடிட்டரின் விடு மற்றும் அலுவலகங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சொப்னா மற்றும் சிவசங்கரின் வருமான வரி கணக்கை அந்த ஆடிட்டர் தாக்கல் செய்வதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் கூடுதலாக ஆதாரங்களை சேகரிப்பதற்காக மற்றொரு குற்றவாளியான ரமேஷ் என்பவரை சிவசங்கரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு NIA அதிகாரிகள் நேற்று முன்தினம் அழைத்து சென்றனர்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பு எதிரே உள்ள ஓட்டலில் தான் தங்க கடத்தல் தொடர்பாக அனைவரும் சந்தித்து சதித்திட்டம் தீட்டியதாக சொப்னா உள்ளிட்ட குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதை உறுதிசெய்ய ரமேஷை அந்த ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பல தகவல்களை அதிகாரிகள் உறுதி செய்து கொண்டனர். தங்க  கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சொப்னாசுரேஷ் மற்றும் சந்திப்நாயர் ஆகியோரை சுங்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர் அவர்கள் இருவரையும் இம்மாதம் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து எர்ணாகுளம் மாவட்ட சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்

Categories

Tech |