கேரளாவில் இன்று மேலும் 8,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 26 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,282 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 8,511 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 77 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 95 ஆயிரத்து 657 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரத்து 293 பேர் குணமடைந்து உள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் இன்று மட்டும் 3 ஆயிரத்து 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை கடந்துள்ளது. கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 356 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 7 லட்சத்து 93 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது.