ஐக்கிய அரபு அமீகரத்தில் குடியேறிய இந்தியர்களின் நிலை குறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், ” ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறிய 2.8 மில்லியன் இந்தியர்களில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார். துபாயில் நிலைமை மோசமடைந்து வருவதாகவும், மேலும், அங்கு போதிய தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் இருப்பதாகவும்” கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“கேரளர்களில் பெரும்பான்மையானவர்கள் நீல காலர் தொழிலாளர்கள் என்று எங்களுக்குத் தெரியும். அவர்கள் துபாயின் அதிக மக்கள் தொகை உள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். எனவே நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறு மிக அதிகம். இந்த சூழ்நிலையில், இந்தியாவில் இருந்து துபாய்க்கு புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து கேரள அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
எனவே,” துபாயில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு போதுமான உணவு, மருந்துகள், தனிமைப்படுத்தல் மற்றும் அவசர சேவை வசதிகள் செய்து தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை அவசரமாக ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.