கடலில் நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பலமுன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் தற்போது தமிழில் இவரது நடிப்பில் “அண்ணாத்த” மற்றும் “சாணி காயிதம்” போன்ற படங்கள் உருவாகி கொண்டிருக்கிறது. இதனையடுத்து தெலுங்கில் “குட் லக் சகி” மற்றும் மலையாளத்தில் “மரைக்காயர்” போன்ற படங்களும் வெளிவர காத்திருக்கின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் தற்போது அவர் கடலில் நின்றபடி எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.