”தளபதி 66” படத்தில் கதாநாயகியாக நடிப்பது குறித்து கீர்த்தி சுரேஷ் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”. இதனையடுத்து, விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான தமன் இசையமைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில். ‘நான் ”தளபதி 66” படத்தில் நடிக்கவில்லை என தெளிவாக கூறியுள்ளார்”.
.@KeerthyOfficial denies the rumors of #Thalapathy66! #Beast @actorvijay
— VTL Team (@VTLTeam) December 9, 2021