முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது தனது வீட்டின் மொட்டை மாடியில் தனியாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
https://www.instagram.com/p/CRtkT0QpcFI/