கடந்த 2 மாதத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமின் ரத்து என்றும் ஜாமினில் இருந்து குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீன் ரத்தாகும்.
கடந்த இரண்டு மாத காலத்தில் 50 குற்றவாளிகளின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 7 ஆண்டுகளில் குற்றத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்காண ஜாமீனை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.