வெளிநாட்டில் இளைஞரை துரத்தி , துரத்தி டார்ச்சர் செய்யும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
நவீன உலகில் ஸ்மார்ட் போன் தேவை என்பது அத்யாவசியமாக மாறியுள்ளது. அனைவரும் பயன்படும் தவிர்க்கமுடியாத சாதனமாக இருந்து வருகின்றது.மேலும் நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.உலகளவில் ஸ்மார்ட் போனின் தேவை அதிகரித்து வரும் நிலையில் அந்நிறுவனமும் புதிய புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து வருகின்றது.பாதுகாப்பு வசதிக்காக ஸ்மார்ட் போன்கள் கொண்டு வந்துள்ள unlock வசதி finger lock இருந்த நிலையில் , தற்போது face lock வசதியும் பல ஸ்மார்ட் போன்களில் வந்துள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டு பூங்கா ஒன்றில் இளைஞர் மற்றும் பெண் அமர்ந்துக் கொண்டு இருக்கும் போது அந்த பெண் இளைஞரின் முகத்தில் ஃபோன் – ஐ காட்டி unlock செய்ய முயற்சி செய்தார். அப்போது அந்த இளைஞரோ pepper spray தான் அடிக்கிறார் என நினைத்து பெண்ணிடமிருந்து தப்பிக்க முயற்சித்து ஓட நினைத்த போது இருவருக்கும் இடையே நடைபெற்ற ஸ்மார்ட் போன் போராட்டம் காண்போரை சிரிக்க வைத்ததோடு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
https://twitter.com/apiecebyguy/status/1175926562564317184