கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த ரவி என்பவர் வெள்ளவேடு பஜார் பகுதியில் 4 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது கடைக்கு வந்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் சாப்பிடுவதற்கு ப்ரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து ப்ரைட் ரைஸ் வாங்கிக்கொண்டு மேலும் அவரிடம் ரூபாய் 250 பணத்தை கேட்டுள்ளார். இதற்கு மறுத்துள்ள கடைக்காரர் ரவியை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து ரவி வெள்ளவேடு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.