Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நண்பரிடம் பேசி கொண்டிருந்த எலக்ட்ரீசியன்…. பைக் திருட முயன்ற 2 பேர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்….!!

கத்தியைக் காட்டி பைக் திருட முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுண்டிவாக்கம் கிராமத்தில் கருணா என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருணா பொருட்கள் வாங்குவதற்காக செய்யாறுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கருடா வண்டியை நிறுத்திவிட்டு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பின் பெயர் பலகை இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இறங்கி கருணாவின் மோட்டார் சைக்கிளை எடுத்தனர்.

இதனை பார்த்த கருணா ஏன் பைக்கை எடுக்கிறீர்கள் என கேட்டபோது அவர்கள் 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி வண்டியை தள்ள முயற்சி செய்தனர். அப்போது கருணா அங்கிருந்தவர்களின் உதவியுடன் 2 பேரையும் பிடித்து செய்யாறு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் வேலூர் கொசப்பேட்டை பகுதியில் வசிக்கும் ஷகில் மற்றும் சுந்தர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து கருணா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |