நடிகை கேத்ரின் தெரசா வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்கரூ.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
நடிகர் கார்த்தியின் “மெட்ராஸ்” திரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. இவர் கணிதன்,கலகலப்பு-2 உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த அருவம் திரை படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய திரை படத்துக்கு கதாநாயகியை தேடி வந்தனர். அப்போது பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹாவை அணுகினர். அவர் பாலகிருஷ்ணா வயதான நடிகர் என்பதை சுட்டிகாட்டி அவருடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். ஆனால் சோனாக்சி சின்ஹா, லிங்கா திரை படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் வேறு சில முன்னணி நடிகைகளை திரைகபடக்குழுவினர் தொடர்பு கொண்டு பேசினர். நடிகைகள் அனைவரும் வயதான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிப்பதா என்று குறைகூறி இளம் கதாநாயகர்கள் தங்களை புறக்கணித்து விடுவார்கள் என்று கூறினர் . இறுதியாக திரைப்படகுழுவினர் கேத்ரின் தெரசாவை அணுகினர். அவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு தனக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்க தயார் என்று நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.
அந்த நிபந்தனைக்களை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது
கேத்ரின் தெரசா இதுவரை நடித்த படங்களில் ரூ.50 மற்றும் ரூ.60 லட்சமே வாங்கியதாகவும் இப்போது ரூ.1 கோடி சம்பளத்தை எட்டி உள்ளார் என்றும் பட உலகில் பேசப்படுகிறது. இந்த படத்தில் கேத்ரின் தெரசா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6-ந் தேதி தொடங்க இருக்கிறது.