Categories
உலக செய்திகள்

கதறி அழுத ஜெர்மனிய சிறுமிக்கு…. கிடைத்த பெரும் தொகை…. சிறுமியின் நெகிழ்ச்சி முடிவு…!!!

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி வெற்றி வாய்ப்பை இழந்ததால்  கண்ணீர் விட்டு கதறி அழுத ஜெர்மனிய சிறுமிக்காக திரட்டப்பட்ட தொகை 36,000 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து – ஜெர்மனி அணிகள் மோதிக்கொண்டன. ஆனால் ஆட்டத்தில் ஜெர்மனி தோல்வியடைந்ததால் போட்டியை காண வந்த 9 வயது சிறுமி தாங்க முடியாமல் கதறி அழுதது,  சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்தது. ஆனால் பிரிட்டன் ரசிகர்கள் சிலர் இதனை கேலி ,கிண்டலுக்கு ஆளாகினர் . இதனால் இந்த சிறுமிக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரிட்டனை சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் 500 பவுண்டுகளை சிறுமிக்கு பரிசாக அளிக்க விரும்புவதாகவும் அதற்காக பொதுமக்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இவர்  சிறுமிக்காக 500 பவுண்டுகளை திரட்ட எடுத்த முயற்சி தற்போது  36,000 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. மேலும் அந்த சிறுமி தேடி கண்டுபிடித்து இந்த தொகையை சிறுமியின் குடும்பத்தினரிடம் கொடுக்க முன்வந்தனர். ஆனால் சிறுமி இந்தத் தொகையை சிறுவர்களுக்காக இயங்கும் UNICEF அமைப்பு அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டார் . அத்துடன் ஆதரவு அளித்த அனைவருக்கும் சிறுமியின் குடும்பத்தினர்  நன்றி தெரிவித்துள்ளனர். இதனால் சிறுமிக்காக திரட்டப்பட்ட  36,000 பவுண்டுகள் UNICEF அமைப்புக்கு வழங்கப்பட உள்ளது.

Categories

Tech |