நடிகை கஸ்தூரி பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் சினிமா பற்றியும் அரசியல் என பொது விஷயங்கள் பற்றியும் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பார். இதையடுத்து, டிவிட்டர் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் பிரபல நடிகர் மற்றும் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பல பேட்டிகளில் தன்னைப்பற்றி தவறாக பேசி வரும் அவரை இனி சும்மா விட போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த டிவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.