Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவேப்பில்லையா…? அதில் இத்தனை பயன்கள்…? இனி சாப்பாட்டுல ஒதுக்க மாட்டீங்க…!!

கருவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

அனைத்து சமையலையும் அலங்கரிக்க பயன்படுத்துற கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.

1.வாரம் ஒரு நாள் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை அரைத்து உருண்டையாக்கி சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும், முடி கொட்டுதல் குணமாகும். கறிவேப்பிலையை அரைத்து வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்தாலும் இளநரை மறைந்து தலைமுடி நன்கு வளரும்.

2.கறிவேப்பிலையுடன் வெண்ணை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர முகப்பரு மறையும், முகம் பிரகாசிக்கும்.

3.கறிவேப்பிலையை மென்று தின்றால் வாய்புண் ஆறும். நல்ல பசி எடுக்கும் மற்றும் உடல் வலுபெறும்.

4.கருவேப்பிலையோடு கொஞ்சம் சீரகம் மஞ்சள் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் மோர் அல்லது பாலுடன் கலந்து குடித்தால் பித்த சூடு மற்றும் கர்ப்பப்பை சூடு நிவர்த்தியாகும்.

5.தினமும் கொஞ்சம் கறிவேப்பிலை இலைகளை மூன்று மாதம் சாப்பிட்டு வர சர்க்கரை நோயால் உடல் கனமாவது குறையும்.

6.இரும்பு சத்து அதிகம் இருப்பதால் கறி வேப்பிலை ரத்த சோகையைக் குணப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலையை சாப்பிடும் பொழுது தூக்கி போடாதீங்க.

Categories

Tech |