Categories
அரசியல் மாநில செய்திகள்

கருணாநிதி, உதயநிதி போட்ட ஒப்பந்தம் அல்ல – அர்ஜுன் சம்பத்துக்கு எச்.ராஜா ஆதரவு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  மத்தியில் பாரதிய ஜனதா அரசு ஏற்படுவதற்கு 25 ஆண்டுகள் முன்பாக….  ஏனென்றால் 1998ல் பிஜேபி சர்க்கார் வந்தது. அதற்கு 25 ஆண்டுகள் 24 ஆண்டுகளுக்கு முன்னாடி 1974 இல் கட்ச தீவானது இந்த நாட்டின் நலனுக்கு விரோதமாக, இந்திய மீனவர்களின் நலனுக்கு விரோதமாக, திமுகவின் கூட்டணி கட்சி, காங்கிரஸ் செய்தது குற்றம்.

தமிழக ஊடகங்கள் பொய் பரப்புபவர்கள் என்று நான் சொல்வதற்கு காரணமே, என்ன காரணம் ? நீங்கள் சர்வதேச ஒப்பந்தங்களை ஏதோ கருணாநிதியும், உதயநிதியும் போட்டுக்கிட்ட ஒப்பந்தம் மாதிரி, எப்ப வந்தாலும் ரத்து செய்யலாம் என்று நாம் பேச முடியாது. அப்பா – மகனுக்குள் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம், என்ன வேணாலும் செய்யலாம். ஆனால் சர்வதேச ஒப்பந்தம், இன்னொரு நாட்டோட போட்டது, அதை நாம் மாற்றம் செய்ய வேண்டுமானால் அந்த நாட்டோட பேசணும் வேண்டுமா இல்லையா?

அப்போ அதனால் இதைப் பற்றி பேசுகின்ற அத்தனை பேருமே தீய நோக்கத்தோடு பேசுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் மாண்புமிகு மேதகு ஆளுநரின் உடைய வீட்டிற்கு முன்னால், ராஜ் பவனுக்கு முன்னாடி, போராட்டம் நடத்தினார்கள்,  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதே மாதிரி இந்தியாவிலேயே இரண்டு இடத்தில் தான் டிபென்ஸ் ஸ்டாக் ஒன்று உத்தரப்பிரதேசம், இன்னொன்று தமிழகம்.

தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக்கூடிய ஒரு திட்டத்தை துவக்கி வைக்க பிரதமர் வந்தபோது, ஸ்டாலின் பலூன் விட்டாரா? இல்லையா? கோபக் மோடி என்று அப்போ அதெல்லாம் உங்களுக்கு எதிர்கட்சியாக இருந்தால், ஜனநாயக உரிமை என்று சொன்னால், இன்றைக்கு ராகுல் காந்திக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதற்கு அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு ஜனநாயக உரிமை இருக்கா? இல்லையா? ஆகவே தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையின் எதேச்சை அதிகாரமான ஜனநாயக விரோத தீய நடவடிக்கை இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

Categories

Tech |