கார்த்தி நடிப்பில் வெளியான ”மெட்ராஸ் ”திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தமிழ் சினிமாவின் படங்களுக்கு பாலிவுட்டில் அதிக வரவேற்பு உள்ளது. அந்தவகையில், பார்த்திபனின் ஒத்த செருப்பு, ராட்சசன், சூரரைப்போற்று மற்றும் மாநகரம் போன்ற படங்கள் பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகின்றன.
அந்த வரிசையில், கார்த்தி நடிப்பில் வெளியான ”மெட்ராஸ்” திரைப்படம் இணைந்துள்ளது. மெட்ராஸ் படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் மையமாக சுவர் தான் இருந்தது. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சனங்கள் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.