Categories
லைப் ஸ்டைல்

வழிபாட்டிற்கு இல்ல… இது இதுக்கு தான் அவசியம்…!!

வழிபாட்டிற்கு பயன்படுத்தும் கற்பூரத்தின் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு

ஆலயங்களிலும் வீடுகளிலும் வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படும் கற்பூரத்தை நம் முன்னோர்கள் பாக்டீரியா கிருமிகளை அளிக்கவும் பயன்படுத்தியுள்ளனர். ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டதாக கற்பூரம் விளங்கியுள்ளது. அவை

  • நல்லதொரு நறுமணத்தை கொடுத்து கிருமிநாசினியாக பயன்படுத்தப்படுகிறது கற்பூரம்.
  • தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சேற்றுப்புண் ஏற்படும் இடத்தில் போட்டு வந்தால் உடனடியாக குணமடையும்.
  • தோல் வியாதிகளுக்கு கற்பூரம் சிறந்த மருந்தாகும்.
  • தீயினால் ஏற்பட்ட காயம் போன்றவற்றிற்கு கற்பூரம் அருமருந்தாகும்.
  • கற்பூரத்தையும் சந்தனத்தையும் நன்றாக கலந்து சருமத்தில் பூசினால் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் கருமை யை தடுக்க முடியும்.
  • கற்பூரத்தை துளசியுடன் சேர்த்து சாறெடுத்து பற்றுப்போட்டால் தலைவலி குறைந்துவிடும்.
  • எலுமிச்சை சாறுடன் கற்பூரத்தைச் சேர்த்து சாறு எடுத்து தலையில் தேய்த்தால் ஒற்றை தலைவலி நீங்கும்.
  • கிராம்பு கற்பூரம் சேர்த்து பொடியாக்கி பல் வலியுள்ள இடத்தில் வைத்து வந்தால் பல்வலி குணமடையும்.
  • மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் கற்பூரத்தையும் என்னையும் சேர்த்து மசாஜ் செய்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Categories

Tech |