Categories
அரசியல்

“கர்ப்ப காலத்தில் பெண்களுக்கான எளிய யோகாசனங்கள்”…. தினமும் இத ஃபாலோ பண்ணுங்க….!!!!!!!!

கர்ப்ப காலத்தில் சில யோகாசனங்கள், தியான நுட்பங்கள் மற்றும் சுவாச பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனென்றால் அவை  மன அழுத்தத்தை நீக்கி பதட்டத்தை குறைக்கின்றது. மேலும் டெலிவரி நேரத்தில் கர்ப்பிணிகளை சாந்தமாகவும் மன தைரியத்துடன்  வைத்திருக்க உதவுகின்றது. யோகாவை தாய்மார்கள் சரியாக செய்து வந்தால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் உடலும் மனமும் மென்மை ஆகின்றது. ஒரு நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் நீங்கள் யோகா பயிற்சி செய்வது மிக முக்கியமாகும் கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் கார்டியோ மற்றும் கஷ்டமான உடற்பயிற்சி முறைகளை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் இது குமட்டல்  நிலையை அதிகரிக்க கூடும் நேரம் கருவின் வளர்ச்சியும் தடுக்கிறது. உடலில் ஏற்படும் வலிகள் அனைத்தையும் அகற்றக்கூடிய ஈஸியான போஸ்களை கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டுமென இமயமலை சித்தர் கிராண்ட்மாஸ்டர் அக்ஷிர் தெரிவித்துள்ளார். கர்ப்ப காலகட்டத்தில் உடலை கடுமையாக வளைத்து செய்யப்படும் பயிற்சிகள், குதித்து செய்யும் பயிற்சிகள் அல்லது கை கால்களை நீட்டி உடலுக்கு வலியை தரும் பயிற்சிகளை செய்யவே கூடாது. பின்வரும் யோகப்பயிற்சிகள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கின்றது அதனை தற்போது காண்போம்.

பத்த கோனாசனம்; பத்த கோனாசனம் என்றால் கட்டப்பட்ட கோண நிலை எனப்படும். தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி உட்கார்ந்து முழங்கால்களை மடக்கி உள்ளங்கைகளை ஒன்றாக குதிங்கால்களையும் வயிற்றின் கீழ்ப்பகுதியில் இருக்கும்படி கை விரல்களை ஒன்றாக சேர்த்து உள்ளங் கைகளை சற்று நகர்த்தி கைவிரல்களால் பாதங்களை கெட்டியாக கொண்டு நேராக நிமிர வேண்டும். முதுகு கழுத்து தலை ஒரே நேராக இருக்க வேண்டும். மேலும் இது 10 கோன ஆசனத்தின் முதல் நிலையாகும். இந்த நிலையில் 5 முதல் 10 நிமிடம் சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்க வேண்டும் 5 நிமிடம் கூட ஆசனத்தில் நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு நேரம் கூட செய்து கொள்ளலாம். வெறும் வயிற்றுடனோ அல்லது உணவு உண்டு இரண்டு மணி நேரம் கழித்த பிறகும் இந்த ஆசனப் பயிற்சியை செய்யலாம். இந்த யோகா பயிற்சியை செய்வதனால் இடுப்பு எலும்பு நன்றாக விரிவடைந்து உடல் பலம் பெற்று  சுகப்பிரசவம் ஏற்படும். கருவுற்ற 4 மாதத்தில் இருந்து இந்த யோகா பயிற்சியை செய்து வந்தால் சுகப்பிரசவம் ஆகும். அதிலும் குறிப்பாக ஒரு நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த நிலையில் அமர்ந்து இருந்தால் சுகப்பிரசவத்திற்கு மிகவும் அனுகூலமாகும். நமது கலாச்சாரத்தில் முன்னர் பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளை ஒவ்வொரு ஆசனங்களை குறித்தது. காலமாற்றத்தினால் தற்பொழுது பல கர்ப்பிணிகளுக்கு வீட்டு வேலைகள் மிகவும் எளிதாக அவர்களால் ஒரு சில வேலைகளை செய்ய வாய்ப்பில்லாமல் போகிறது. அந்த வகையில் மேல் கூறிய பிஜ் தியான் / ஆரம்பம் தியான் ஆசனங்களை ஒரு நல்ல யோகா நிபுணரின் ஆலோசனையுடன் செய்வது நல்ல பலனை அளிக்கும்.

சுகாசனம்: சுக என்றால் அனுகூலமான துன்பமில்லாத என பொருள். ஆசனம் என்றால் இருக்கை இந்த சுகாசனத்தில் அமர்வது சுலபமாகவும் சுகமாகவும் இருப்பதனால் இதனை சுகாசனம் என அழைக்கப்படுகின்றது. முதலில் ஆசனத்தில் அமரவும் பிறகு இடது வலது காலை ஒன்றன்பின் ஒன்றாக மடக்கவும் வலது பாதம் இடது தொடையிலும் இடது பாதம் வலது காலின் கீழும் இருக்கட்டும் மார்பை நிமிர்த்தவும். தலை கழுத்து முதுகு ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இரண்டு கைகளையும் நீட்டி முழங்காலின் மேல் வைத்து விரல்களால் முத்திரையை செய்யவும். சின்முத்திரை பற்றிய விளக்கம் அடுத்த ஒரு மாதத்திற்கு பின் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

மார்ஜரி ஆசனம்; மார்ஜரி என்றால் பூனை என்று பொருள்படும் பூனை முதுகை மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் வளைப்பது  போல இந்த ஆசனம் அமைந்திருப்பதால் மார்ஜரி ஆசனம் என அழைக்கப்படுகின்றது. தரை விரிப்பின் மேல் மண்டியிட்டு அமரவும். முன் வளைந்து தோள்களுக்கு நேராக உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும் கைகளை நேராகவும் கை மணிக்கட்டுக்கு நேராக இருக்கும்படி அகற்றி வைக்கவும் உடல் முன்னோக்கியும் அல்லது பின்னோக்கியோ போகாதபடி இடுப்பிலிருந்து பூஜம்  வரைக்கும் உள்ள உடல் பாகம் சமமாக இருக்க வேண்டும். இது மார்ஜரி ஆசனத்தின் முதல் நிலை. மூச்சை உள்ளிழுத்து தலையை மேலாக உயர்த்தவும். அதே நேரம் முதுகை கீழ்நோக்கி நன்றாகவும் இந்த நிலையில் 30 வினாடி மூச்சை அடக்கி வைக்கவும் மூச்சை வெளியே விட்டு தலையை இரு கைகளுக்கும் இடையில் உள்நோக்கி வளைந்து. முதுகை மேலே தூக்கவும் இந்த நிலையில் மீண்டும் மூச்சை உள் இழுக்காமல் முப்பத்தி ஐந்து வினாடிமுதல் பத்து சுற்று பயிற்சி மேற்கொள்ளலாம்.

அதோ முகோ ஸ்வாசனா; இந்த யோகாசனம் ஓய்விற்கு பயன்படுத்தப்படுகின்றது இது அமைதிப்படுத்தி உடலுக்கு சக்தியை அளிக்கின்றது.

சித்தோஹம் கிரியா; கிரியா என்றால் உள்நிலை செயல்பாடு என பொருள் படும் உள்நிலை செயல்பாட்டில் உடல் மற்றும் மனதின் ஈடுபாடு கிடையாது. ஏனென்றால் உடலும் மனமும் எண்ணமும் உங்களுக்கு வெளியாட்கள் தான் உங்கள் சக்திநிலை மூலமாக ஒரு செயலை செய்ய தேவையான அளவு நிபுணத்துவம் உங்களுக்கு இருந்தால் அது வெளி நிலையில் ஒரு செயல் செய்தால் அதன் பெயர்கள் முன்னிலை செயல்பாட்டை கிரியா என அழைக்கின்றோம். இது மனதை அமைதிப்படுத்தி உடலுக்கு புத்துயிர் அளிக்கிறது. மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் நீக்குகிறது. மேலும் கர்ப்பிணிகளை  ஆரோக்கியமாக வைத்திருக்கவும் ரத்த அழுத்தத்தை சமப்படுத்தவும் இது உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் தசைகள் மற்றும் தசை நார்கள் வலு பெற பெறுவதற்கு முன்பே யோகா உதவுகிறது. இதனால் குழந்தை வளர்ந்து கருப்பை விரிவடையும் போது கீழ் முதுகு மற்றும் கால்களில் ஏற்படும் வலியைப் போக்க இந்த யோகா உதவுகிறது. யோகா செய்வதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு வகையான பலன்கள்  கிடைக்கின்றது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தாய் சேய் உடலில் ஆக்ஸிஜன் சுழற்சி நல்ல முறையில் இருக்கும். இதனால் கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சி மேம்படும் பிரசவமும் வழியில்லாமல் விரைவாக நடைபெறும்.

Categories

Tech |