Categories
தேசிய செய்திகள்

“மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா”…. விருது வழங்கி கௌரவித்த முதல்வர்…!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் 29-ம் தேதி தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு முதல்வர் பசுவராஜ் பொம்மை புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். கர்நாடகா மற்றும் கன்னட மொழிக்காக புனித் ராஜ்குமார் செய்த தொண்டு மற்றும் அவருடைய சமூக சேவையை கௌரவிக்கும் விதமாக கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விழா நேற்று ராஜ்யோத்சபாவை முன்னிட்டு நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியிடம் முதல்வர், ரஜினி மற்றும் ஜூனியர் என்டிஆர், ஆகியோர் இணைந்து விருதினை வழங்கினர். அதோடு வெள்ளிப்பட்டையும் மற்றும் 50 கிராம் மதிப்பிலான தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. மேலும் கர்நாடக ரத்னா விருதை பெரும் 10+-வது நபர் புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |