கர்நாடக மாநிலத்தில் நேற்று ஓடும் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்தது பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஆட்டோவில் சென்ற பயணி குக்கர் வெடிகுண்டை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிரேம் ராஜ் என்பவரிடம் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தகவலை கர்நாடக டிஜிபி உறுதி செய்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்டோ வெடி விபத்து நடந்ததன் காரணமாக ஓசூர் அருகே உள்ள ஜுஜுவாடி பகுதியில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பிறகு தான் தமிழகத்திற்குள் போலீசார் அனுமதிக்கிறார்கள். கர்நாடக எல்லை மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கேரள எல்லைகளிலும் தமிழக போலீசார் பாதுகாப்பை தீவிர படுத்தியுள்ளதோடு, தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் பிறகு வட மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பிறகு தான் அனுமதிக்கிறார்கள். இந்நிலையில் கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கார் வெடி விபத்து நடந்த சம்பவத்தில் ஜமேஷா மூபின் என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என்று பாஜக கூறி வருவதோடு திமுக அரசை கடுமையாக விளாசவும் செய்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பிரச்சனை அடங்குவதற்குள் கர்நாடக மாநிலத்தில் சட்ட விரோதமான செயல்களுக்காக ஆட்டோவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. மேலும் பாஜகவினர் திமுகவை கடுமையாக விளாசிய நிலையில், பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.