கர்நாடக மாநில சட்டப்பேரவை வருகின்ற திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் இரண்டாம் நாள் விவாதம் இன்று நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான முழு விவாதம் நடைபெற்ற பிறகே வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் , தீர்மானத்தின் மீது இன்னும் சில உறுப்பினர்கள் பேச இருப்பதால் ஆளும் கூட்டணி கட்சியினரின் கோரிக்கையை ஏற்று கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணிக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்தி வைத்தார்.