கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் காரணமாக கர்நாடகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு இவர் பதில் அளித்துள்ளார். அதாவது மாநில அளவில் கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்றும் இன்னும் ஒரு வாரம் கொரோனா பரவல் குறித்து பொறுத்திருந்து பார்க்கப்படும் என்று கூறியுள்ளார். உலக மக்கள் கொரோனா விடுமுறைகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே கொரோனா தாக்கம் குறைந்து வரும்.
இன்னும் ஒரு வாரத்திற்கு பின்புதான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே ராய்ச்சூர் மாவட்டத்தில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட முதல் மந்திரி எடியூரப்பாவிடம், ரமேஷ் ஜார்கி கோளி பிரசாரம் செய்வாரா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது அவர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ரமேஷ் ஜார் கி கோளி பிரசாரம் மேற்கொள்வார். பா ஜனதா வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.