Categories
சினிமா தமிழ் சினிமா

கர்ணன் டீசர் குலைநடுங்க வைக்கிறது…. பிரபல இயக்குனர் எச்சரிக்கை…!!

கர்ணன் டீசரை பார்த்தால் குலை நடுங்குகிறது என்று பிரபல இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த டீசரை ஏற்கனவே பார்த்துள்ள இயக்குனரும், நடிகருமான சுப்ரமணியம் சிவா அவரது கருத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், எச்சரிக்கையாக இருங்கள். நேற்றும் கர்ணன் டீசர் பார்த்தேன். குலைநடுங்க வைக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.தனுஷ் என்ற அசுரன் எதிரியாக நினைப்பவர்களும் கொண்டாடித் தான் ஆக வேண்டும் என திரும்பவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து முடிவில் பயத்தையும், பதட்டத்தையும் தந்தும் அனுப்புகிறார் கர்ணனாக! என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |