Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘கர்ணன்’…. தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா…?

தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. கடந்த 9ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இத் திரைப்படத்தை பார்க்கும் திரை பிரபலங்கள் பலரும் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கர்ணன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதன்படி தெலுங்கில் ரீமேக்காகும் இத்திரைப்படத்தை பெல்லம்கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார்.

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ்

இவரது மகனான பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் தான் கர்ணன் படத்தில் தனுஷ் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் தமிழ் சினிமாவில் வெளியான சுந்தரபாண்டியன், ராட்சசன் உள்ளிட்ட படங்களின் ரீமேக்கில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |