கர்நாடகாவில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் சித்ரா துர்கா மாவட்டம் அருகில் ஹிரியூர் என்ற இடத்தில் நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்தில் தீப்பற்றியது. இதனையடுத்து பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் அலறி அடித்து கீழே இறங்க முயற்சித்தனர்.
அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 27 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.