இத்தாலியர் ஒருவரை 600க்கும் மேற்பட்ட மக்கள் ஓன்று திரண்டு கற்களால் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 65 வயதான Giorgio scanu என்ற இத்தாலியர் ஹோண்டுராஸ் என்ற பகுதியில் பொறியாளராகப் பணிபுரியும் போது உள்ளூர்ப் பெண் ஒருவரை மணந்து கொண்டு இருபது ஆண்டுகளுக்கு முன்பே அங்கு குடியேறியுள்ளார். இதனையடுத்து scanu தனது குடியிருப்பிலுள்ள தோட்டத்தில் இருக்கும் பூக்களை சேதப்படுத்தியதற்காக 78 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 78 வயதுடைய நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் அந்த நகரில் உள்ள 600க்கும் மேற்பட்ட மக்கள் scanu வீட்டிற்குச் சென்று அங்குள்ள வாகனத்திற்கு தீயிட்டுக் கொளுத்தியும், கல், தடி, மற்றும் கத்தியைக் கொண்டு தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு காரணமான 19 முதல் 55 வயதுக்கு உட்பட்ட 5 பேரை கைது செய்தும் மீதமுள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடியும் வருகின்றனர்.