இயக்குனர் சுந்தர் பாலு இயக்கத்தில் நடிகை திரிஷா நடிப்பில் ‘கர்ஜனை’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
கர்ஜனை திரைபடத்தில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். மனிதனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கிட முடியாது என்பதுதான் இதன் கதை.
ஆக்சன், த்ரில்லர், சுவாரஸ்யம் என அனைத்தும் நிறைந்ததாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. திரிஷா நடிப்பில் ‘கர்ஜனை’ படம் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக தள்ளி போனாலும் நீண்ட நாட்களுக்கு பின் தற்போது இதன் டிரெய்லர் வெளியானது படக்குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளளது.