இறைச்சி வாங்க சென்றவரை கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அயத்பாஷா. இவர் பானாவரம் அருகே உள்ள இறைச்சி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர் சரவணகுமார் என்பவர் நேற்று கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அங்கு அயத்பாஷா இறைச்சியை குறைவாக எடை போட்டுள்ளார். இதனை சரவணகுமார் தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அயத்பாஷா கத்தியால் சரவணகுமாரின் இடது தாடையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சரவணகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அயத்பாஷாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.