பிரபாஸின் அடுத்த படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் பிரபாஸ் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை கொடுத்து வருகிறார். அந்தவகையில் இவர் தனது 25-வது படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். ஸ்பிரிட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை சந்தீப் ரெடி வங்கா இயக்க உள்ளதாகவும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொழிகளில் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. முதல்முறையாக பிரபாஸும், கரீனா கபூரும் இணைய இருப்பது இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.