Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மீண்டும் மீண்டும் அட்டகாசம்… கரடியை பிடிக்க வனத்துறையினர் முகாம் ….!!

தென்காசி மாவட்டம் புளியரை அருகே கிராமத்தில் மீண்டும் அட்டகாசம் செய்யும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில்  ஈடுபட்டுள்ளனர்.

தெற்கு மேடு என்ற மலையடிவார கிராமத்தில் கடந்த 12-ம் தேதி மாலை கரடி ஒன்று புகுந்து அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி நின்று அட்டகாசம் செய்தது. வனத்துறையினர்  மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் கரடியை காட்டுக்குள் விரட்டினர். ஆனால் அந்த கரடி மீண்டும் மீண்டும் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து உள்ளனர்.

கரடியை பிடிக்க திருநெல்வேலியில் இருந்து 12 பேர் கொண்ட சிறப்பு குழு தெற்கு மேடு மலை கிராமத்தில் முகாமிட்டுள்ளது. இரவு பகலாக வனத்துறையினர் அங்கேயே தங்கி கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு தினங்களில் கரடி பிடிபடும் என்று அப்பகுதி கிராம மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Categories

Tech |