கன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகில் உள்ள முன்சிறை பெருகிலாவிளையில் வசிப்பவர் தொழிலாளி சிசில்ராஜ். இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள். சம்பவம் நடந்த அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிபிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதார்கள்.
இதுகுறித்து புதுக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பின்பு சிசில்ராஜ் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.