Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இரண்டு தலைகளுடன்….. வித்தியாசமாக பிறந்த கன்றுக்குட்டி…. ஆச்சரியத்துடன் பார்க்கும் கிராம மக்கள்…!!

இரண்டு தலைகளுடன் பிறந்த கன்று குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர்  விவசாய வேலை செய்து வருகின்றார். இவர் தனது வீட்டில் இரண்டு பசுக்களை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சதீஷ் வளர்த்த பசு ஒரு கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது.

ஆனால் பிறந்த அந்த கன்று குட்டி இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் இருந்ததை பார்த்து சதீஷ் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வித்தியாசமாக பிறந்த அந்த கன்று குட்டியை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Categories

Tech |