கன்னி ராசி அன்பர்களே …! இன்று புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளின் நோக்கங்கள் யாவும் நிறைவேறும். உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நண்பர்களின் ஆதரவும் உற்சாகத்தை ஏற்படுத்தும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வரவில்லை என்ற கவலை வேண்டாம்.
அது உங்களுக்கு கூடிய விரைவில் உங்கள் காதுகளில் வந்து சேரும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மைகள் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருங்கள்.
இன்று காதலர்களுக்கு ஓரளவு சிறப்பான நாளாக தான் இருக்கும். புதிதாக வயப்படக்கூடிய சூழலும் உண்டு. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு எப்போதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்து சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். அனைத்து விஷயங்களும் நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.