Categories
ஆன்மிகம் இந்து

கர்ணன் செய்யாத தானம் அன்னதானம்… அன்னதானத்தின் மகிமை …!!

அனைத்து தானங்கள் செய்து அன்னதானம் செய்யாததால் கர்ணனின் நிலைமையை பாருங்கள்….

அன்னதானத்தின் மகிமை…!!  கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட எல்லாவற்றையும் தானமாக கொடுத்தவன்.  தானத்தின் அடையாளம் அவன்.  ‘தானம் என்றால் என்ன ‘ என்பதை உலகிற்கு காட்டியவன்.  ஒரு சமயம் கர்ணன் தானம் தரும் பொருள்களை,  தன் உள்ளங்கையில் வைத்து கொடுத்து கொண்டிருந்தான். யாசகம் பெற வந்தவர்கள. உள்ளங் கையில் இருந்த பொருட்களை தாமே எடுத்துக் கொண்டனர்.  அங்கு வந்த கிருஷ்ணன்,  கர்ணா.. “தானம் தருபவர்கள் கை மேலேதான் இருக்கும் தானம் வழங்குபவர்கள் கை கீழே இருக்கும் இதுதானே வழக்கம் நீ ஏன் இவ்வாறு செய்கிறாய்” என்று கேட்டார்.

அதற்கு கர்ணன்,  கிருஷ்ணா..” நான் தானம் செய்வது புகழுக்காக அல்ல எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இதைப்போல் தியானம் செய்வதற்கு வல்லமைதா என்று என் கைகளை கீழே வைத்து இறைவனை வேண்டி தானம் செய்கிறேன் நீயே சொல் புண்ணியம் வேண்டுபவர்கள் கை கீழே தானே இருக்க வேண்டும்” என்று கேட்க கண்ணன் ஆமோதித்தான்.  கர்ணன் இறந்ததும் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டான்.  அங்கு சென்று சகல வசதிகளுடன் இருந்தும், அவனுக்கு ஏனோ பசி மட்டும் அடங்கவே இல்லை. எப்பொழுதும் பசி இருந்துகொண்டே இருந்தது.

அவனும் சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்துப் போன பிறகு சொர்க்கத்தின் தலைவனிடம் சென்றுகேட்டான், “நான் எவ்வளவு தான தருமங்கள் செய்து இருக்கிறேன், எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை எனக்கு ஏன் இப்படி பசிக்கிறது”  என்று கேட்டான். அதற்கு சொர்க்கத்தின் தலைவன்,  “கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும், பொருளும், மணியும், ஏன் உன் உயிரையும் தானமாக கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்து சொல் எப்பொழுதாவது யாருக்காவது அன்னதானம் செய்து இருக்கிறாயா”  என்று கேட்டார். கர்ணனுக்கு அன்னதானம் செய்ததாக நினைவு இல்லை.

அப்படியானால் இதற்கு என்னதான் வழி என்று கேட்ட பொழுது, உனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்துகொள் பசி அடங்கி விடும் என்றான்.  கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை சந்தேகம் இருந்தாலும் வேறு வழியில்லை என்பதால் கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்தாலன்  உடனே அடங்கிற்று.  ஒன்றும் புரியாத கர்ணன் இது என்ன மாயம் மந்திரம் என்று கேட்க சொர்க்கத்தின் தலைவன் காரணம் உழைத்தான்.  அன்பான கர்ணா, நீ பூவுலகில் வாழும் பொழுது பசியுடன் வந்த ஒருவன் அன்னதான சத்திரம் எங்கிருக்கிறது என்று கேட்டான்  நீயும் உனது வலது ஆள்காட்டி விரலால் சத்திரத்தின் வழியை காட்டினாய் அந்த புண்ணியச் செயல் இப்பொழுது உனக்கு உதவுகிறது என்று கூறினார.

Categories

Tech |