கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜபுரம் பகுதியில் காட்வின் ஜெபா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் காட்வின் ஜெபா தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தின் அருகில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த வடபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த காட்வின் ஜெபாவை கைது செய்தனர்.
மேலும் காவல்துறையினர் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோன்று தாளமுத்துநகர் பகுதியில் வசிக்கும் முத்துராஜா என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக தாளமுத்துநகர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.