Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை காவல்துறையினர் பஜார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் சாட்டுபத்து கிராமத்தில் வசிக்கும் வெயில்முத்து மற்றும் கருத்தபாண்டியன் என்பதும் அவர்கள் 1\2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 1\2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

 

Categories

Tech |