Categories
மாநில செய்திகள்

கனிமொழி பதவிக்கு ஹெலன் டேவிட்சன் நியமனம்….. வெளியான அறிவிப்பு….!!!

திமுக மாநில இளைஞரணி, மாநில மகளிர் அணி, பிரச்சார குழு செயலாளர், சமூக வலைதள பொறுப்பாளர்கள் ஆலோசனைக்குழு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இளைஞர் அணியின் துணை பொதுச்செயலாளராக எஸ்.ஜோயல், ந.ரகுபதி, இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ். சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து திமுக மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால் காலியாக இருந்த மகளிர் அணி செயலாளர் பதவிக்கு ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்து பொதுச் செயலாளர் துறைமுகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக சட்ட திட்ட விதி 18,19 பிரிவுகளின் படி மாநில மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி செயலாளர், இணை, துணைச் செயலாளர்கள், பிரச்சார குழு செயலாளர், மகளிர் அணி, சமூக வலைதள பொறுப்பாளர், ஆலோசனை குழு உறுப்பினர்கள் பதவிக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திமுக மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன், மகளிர் அணி இணைச் செயலாளராக குமரி விஜயகுமார், மகளிர் அணி துணை செயலாளராக பவானி ராஜேந்திரன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனை போல பிரசாரக்குழு செயலாளர்கள், மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர், ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |