காங்கோ நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து நேரிட்டதில் தொழிலாளர்கள் 53 பேர் உயிரிழந்துவிட்டனர்.
ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோவில் காமிடுகா என்ற இடத்தில் டெட்ராய்டு சுரங்கம் அமைந்துள்ளது. கனமழை காரணமாக சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து உள்வாங்கியது. அப்போது ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர்.
உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புக்குழுவினர் பலரை மீட்டனர், எனினும் மண்சரிவில் சிக்கி சுரங்கத் தொழிலாளர்கள் 53 பேர் பலியாகிவிட்டனர். காங்கோ நாட்டில் உரிமம் இல்லாமல் ஏராளமான சுரங்கம் செயல்படுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதனை அரசு கட்டுப்படுத்தாமல் இருப்பதால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நேரிடுவதாக அவர்கள் கூறினர்.