மகாராஷ்டிரா அரசுக்கும், நடிகை கங்கனாவுக்கும் இடையேயான மோதல் வலுத்து வரும் நிலையில் தான் நடிக்கும் திரை படத்தில் பணியாற்ற மறுப்பு தெரிவித்த ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமுக்கு நடிகை கங்கனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவியது. அந்த பதிவில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் படத்தை தான் நிராகரித்து விட்டதாகவும் தனது நிலைப்பாட்டை தயாரிப்பாளர்களுக்கு விளங்கியதாகவும் அவர்களும் புரிந்து கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் பி.சி. ஸ்ரீராமுக்கு கங்கனா பதிலளித்துள்ளார்.
கங்கனா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் உங்களை போன்ற லெஜெண்ட் உடன் பணிபுரியும் வாய்ப்பைப் தவறிவிட்டதாகவும் இது முற்றிலும் தன்னுடைய இழப்புதான் என்றும் தன்னை பற்றி உங்களுக்கு சங்கடமான எண்ணம் ஏற்பட என்ன காரணம் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் தாங்கள் சரியான வழியை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் என்பதில் மகிழ்ச்சி என்றும் வாழ்த்துக்கள் என்றும் கங்கனாா ரனாவத் தெரிவித்துள்ளார்.