நடிகை கங்கனா ரனாவத் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள மும்பை போலீசாருக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் பிரசாந்த் மரண வழக்கில் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டவர் கங்கனா. நடிகை ரியா சக்கரபோர்த்தி தான் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதாகவும், கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தற்போது ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே 2016ல் நடிகர் ஆதித்திய சுமன் ஒரு பேட்டியில் கங்கனா ராணுவத்திற்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அவர்தான் தன்னை போதை பொருளுக்கு அடிமை ஆக்கினார் என குற்றம் சுமத்தியிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் அடிப்படையில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள மும்பை போலீசாருக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.