நடிகை கங்கனா ரனாவத் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.
ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தில் மதுபாலா, சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் இப்படத்தின் ரிலீசை படக்குழு ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள கங்கனா ரணாவத் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளார். அதன்படி மணிகர்ணிகா பிலிம்ஸ் சார்பில் ‘டிக்கு வெட்ஸ் ஷெரு’ என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை கங்கனா ரணாவத் தயாரிப்பாளராக அறிமுகமாக உள்ள இத்திரைப்படத்தினை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.