Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்களை பாதுகாத்து கொள்வதற்க்கு அருமையான டிப்ஸ் …!!

உங்கள் கண்களை அழகாக வைத்து கொள்வதற்கு எளிய முறையில் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

இந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர், டிவி, மொபைல் போன்ற நவீன வசதிகள் அதிகரித்து  கொண்டே இருப்பதால்,  கண் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சின்ன விஷயங்களிலும் கவனத்தோடு இருந்தால் மட்டுமே உங்கள் கண்களை பாதுகாக்க கொள்ள  முடியம். கையால் கண்களை தொடுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவிய  பிறகே கண்களை தொடவேண்டும்.

கண்களில் தூசி விழுந்தால் உடனே  கைகளை கொண்டு கண்களை கசக்காதீர்கள். முக்கியமாக வெயில் காலத்தில் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், கண்களுக்கு பாதுகாப்பு தரும்  கூலிங் கிளாசை வாங்கி அணிந்து செல்வது ரொம்ப நல்லது. குளிர்ந்த நீரால் கண்களை  சுத்தமாக அடிக்கடி கழுவ வேண்டும். கண்களில் எந்த விதமான பிரச்சனை இல்லை என்றாலும், டாக்டரிடம் சென்று வருடத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

அதன் மூலம் கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டுபிடித்து தீர்த்து கொள்ளலாம். கணினியை  அதிகமாக பயன்படுத்தும்போது கண் தசைகள் தளர்வடைந்து விடும். கண்களில் அலர்ஜி  வராமல் தடுப்பதற்கு கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். அது மட்டுமில்லாமல் சில வினாடிகளுக்கு  கண்களை மூடி விழித்திரைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அதிகமான வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை கூர்மையாக உற்று நோக்குவதை தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கு இடையில், உள்ளங்கையால் இரு கண்களையும் மூடியபடி , ஐந்து நிமிடம், கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். நன்றாக கைகளை தேய்த்துச் சூடுகிளப்பி, கண்களில் ஒற்றினால் , கண் நரம்புகள் புத்துணர்ச்சி அடையும். அதன் மூலம் கண்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வெள்ளரிக்காயை  சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, காலை, மாலை என இரு வேளைகளிலும் கண்களில் வைத்தால் கண் குளிச்சியடையும்.

Categories

Tech |