Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கண்டுகொள்ளாத காவல்துறை – 24 மணி நேரமும் மது விற்பனை…!!

மதுராந்தகத்தில் 24 மணி நேரமும் நடைபெறும் மது விற்பனையை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரும் இவரது மனைவி ஆனந்தியும் தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு வேளையில் மது வாங்க வரும் ஆண்கள் பலர் வீடு தெரியாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டின் கதவைத் தட்டி மது கேட்பதாகவும், அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

24 மணி நேரமும் நடைபெறும் மது விற்பனை குறித்து காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மது விற்பனை செய்பவரின் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |