கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சத்தியமூர்த்தி என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக மடக்கி பிடித்துள்ளனர்.
பின்னர் சத்தியமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.