பெட்டிக் கடைகளில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியில் இருக்கும் பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதிகளில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது 3 பெட்டிக் கடைகளில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து 3 பெட்டிக் கடைகளில் இருந்து மொத்தமாக 20 ஆயிரம் மதிப்புடைய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சக்திவேல், பெருமாள் மற்றும் கற்பகம் என 3 பேரை கைது செய்துள்ளனர்.